தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூகுல் பேவில் பணம் எடுத்து தர கூறி சிறப்பு உதவி ஆய்வாளரை மிரட்டிய மது பிரியர்கள் - நூங்கம்பாக்கம் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்

சென்னை: குடிபோதையில் கூகுல் பேவில் பணம் எடுத்து தர கூறி சிறப்பு உதவி ஆய்வாளரை மிரட்டிய இரு மதுப் பிரியர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Drinks
Drinks

By

Published : Nov 16, 2020, 12:36 PM IST

சென்னை மாம்பலம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராமலிங்கம்(47).இவர் நுங்கம்பாக்கம் காவல் நிலைய போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிப்புரிந்து வருகின்றார்.

நேற்று (நவம்பர் 15) ராமலிங்கம் சாதாரண உடையில் தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள தி.நகர் பேருந்து நிலையம் அருகே மருந்து வாங்கிவிட்டு திரும்ப வந்துள்ளார்.

அப்போது குடிபோதையில் இருந்த இருவர் ராமலிங்கத்திடம் வந்து கூகுல் பே மூலமாக தனது நண்பர் 500 ரூபாய் பணம் அனுப்பி உள்ளதாகவும், அதை எடுத்து கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.

மேலும் ராமலிங்கத்தின் நம்பரை தெரிவிக்கும்படி கூறி வற்புறுத்தியுள்ளனர். நம்பர தர மறுத்ததால் ராமலிங்கத்தை இருவரும் போதையில் அசிங்கமாக திட்டி மிரட்டியுள்ளனர்.

இதனால் உடனடியாக ராமலிங்கம் மாம்பலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் போதையில் இருந்த இருவரையும் பிடித்து விசாரித்து உள்ளனர்.

விசாரணையில், திருவள்ளூரை சேர்ந்த பிரதீப் மோசஸ்(21), மதுரையை சேர்ந்த நந்த குமார்( 21) என்பது தெரியவந்தது. இவர்களிடம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details