தமிழ்நாட்டில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், சில பணிகளுக்குத் தளர்வினை தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது.
அந்தவகையில் டீக்கடைகளில் பார்சல் மட்டும், பேக்கரிகள் பார்சல் மட்டும், உணவகங்கள் பார்சல் மட்டும், பூ பழம் காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள், சிமென்ட், ஹார்ட்வேர்ஸ் விற்கும் கடைகள், மின்சாதனப் பொருட்கள், பழுது நீக்கும் கடைகள், சிறிய ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை புரசைவாக்கம் பகுதியில் சிறு ஜவுளிக் கடைகள் மற்றும் நகைக் கடைகள், கவரிங் நகைக் கடைகள், பெட்டிக்கடைகள் இன்று திறக்கப்பட்டன. அரசு அறிவித்தபடி, கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகமூடி கட்டாயம் அணிந்து வரும்படியும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கடை ஊழியர்கள் வாடிக்கையாளரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.