சென்னை : தமிழ்நாட்டில் கரோனா தாெற்றின் பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசும் விதித்துள்ளது.
கரோனா குறித்த அச்சம் மக்களிடையே இல்லாத நிலையில், பலர் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றுகின்றனர்.
இதனால் கரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பலர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், சென்னையைச் சேர்ந்த பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் ஒரே நேரத்தில் கைகள், கால்கள், வாய் ஆகியவற்றின் மூலம் 5 ஓவியங்களை மற்றவர்கள் துணையின்றி வரைந்துள்ளார். மேலும் கரோனா விழிப்புணர்வு பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தும் விதமாக தன்னுடைய ஒரு கையால் தடுப்பூசி படமும், மற்றொரு கையால் கை கழுவுதல் படமும், வாயால் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டி வரையப்பட்ட ஒரு படத்தையும் என மூன்று படங்களை வரைந்துள்ளார்.
ஒரே நேரத்தில் 5 படங்களை வரைந்து ஓவியர் சாதனை மேலும், இந்தப் படங்களை எல்லாம் வரைந்து கொண்டு இருக்கும்போதே, ஒரு காலால் முகக்கவசம் படமும், மற்றொரு காலால் கரோனா படமும் என ஐந்து படங்களை ஒரே நேரத்தில் 45 நிமிடங்களில் வரைந்து சாதனைப் படைத்துள்ளார்.
இதையும் படிங்க : தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்: நாஞ்சில் சம்பத், நெல்லைக் கண்ணன், பாரதி பாஸ்கர் ஆகியோருக்கு அறிவிப்பு