தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘திராவிட மாடல் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்’ - அமைச்சர் உதயநிதி - importance to sports

முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியானது விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதி

By

Published : Dec 31, 2022, 6:10 PM IST

சென்னை:தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் தென்இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற பெண்களுக்கான 2022-23 ஹாக்கி போட்டிகள், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் 2022 டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த போட்டிகளில் 30 பல்கலைகழக அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டியில் மைசூர் பல்கலைக்கழகம், கர்நாடகம் (University of Mysore) முதலிடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு (Bharathiyar University) இரண்டாம் இடத்தையும், கோழிக்கோடு பல்கலைக்கழகம், கேரளா (University of Kerala) மூன்றாம் இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு (university of tamilnadu) நான்காம் இடத்தையும் பெற்றனர்.

போட்டிகளுக்குக்காண பரிசளிப்பு விழா இன்று (டிசம்பர் 31) சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளையும், காசோலைகளையும் வழங்கினார். முதல் பரிசு தொகையாக ரூ. 1- லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 50- ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 25- ஆயிரம், நான்காம் பரிசாக ரூ. 25- ஆயிரம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியானது விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகள் உட்பட அணைத்து விதமான போட்டிகளிலும் தமிழ்நாட்டு விரர் வீராங்கனைகள் கலந்துகொள்ள ஏதுவாக தேவையான பயிற்சிகள் உள்ளிட்ட அணைத்து விதமான உதவிகளையும் செய்யும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் (Chennai District Masters Athletic Association) சார்பில் சென்னை நேரு விளையாட்டு அரங்களில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 31) பரிசுகளை வழங்கினார்.

இந்த விழாவில் சட்டதுறை அமைச்சர் எஸ். ரகுபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் முனைவர் அதுல்யமிஸ்ரா, இந்திய ஹாக்கி சங்க பொருளாளர் சேகர், மனோகரன், அர்ஜுனா விருது பெற்ற வீரர் முஹமது ரியாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 2022 ஆண்டுக் கண்ணோட்டம் - ஓராண்டில் தமிழக அரசு செய்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details