சென்னை:தமிழ்நாட்டில் காலம் காலமாக இருமொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் எனப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று அதில் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்தி மொழியை மத்திய அரசு தொடர்ந்து திணித்துவருவதாக பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு அவை மீண்டும் புதிய கல்விக்கொள்கை மூலம் உருவெடுத்துள்ளதாகக் கூறி, மாநில அரசு உள்பட பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில், வழக்கில் பயன்படுத்தாத, எழுத்து வடிவம் அற்ற சமஸ்கிருத மொழியில் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் பொதிகையில் தினமும் செய்தி ஒளிபரப்பப்பட வேண்டும் என பிரசார் பாரதி அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.