சமூகநீதி பேராசிரியர்கள் நெடுஞ்செழியன், இரா.சக்குபாய் எழுதியுள்ள "ஆசீவகமும் ஐயனார் வரலாறும்" என்னும் ஆய்வு நூல் வெளியீடு விழா தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மக்களவை உறுப்பினர் ஆ. ராசா உள்ளிட்டவர்கள் பங்கேற்று உரை ஆற்றினர்.
கூட்டத்தில் பேசிய ராசா, "ஆசீவகம் மதம் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதை அன்றே கூறியுள்ளது என்பதை இந்த நூல் சொல்லியிருக்கின்றது. இந்து தமிழர்கள் மதம் அல்ல. ஆசீவகமே தமிழர் மதம். அது திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார். "எங்களை இந்துக்கள் எதிரான கட்சி என்று கூறுகிறார்கள் சிலர். நாங்கள் தான் அதே இந்துக்களுக்கு 69%, 58% போன்ற இட ஒதுக்கீடுக்காக போராடினோம்" என தெரிவித்தார்.
இதையும் வாசிங்க: வள்ளுவரின் குறளாலேயே பாஜகவுக்கு பதிலடி! - சிதம்பரம் அடடே
தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், "இந்த நிகழ்ச்சியில் நான் மட்டுமின்றி அனைவரும் பெருமையோடு பங்கேற்றுள்ளோம். நல்ல மேடை கிடைத்ததும் இயக்கத்திற்கான பணிகளைச் சிலர் மறந்து விடுவார்கள். ஆனால் நெடுஞ்செழியன் இரண்டையும் சேர்த்து செய்துள்ளார். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என பாரதிதாசன் கூறியதற்கு ஏற்ப செயல்படுவர் பேராசிரியர் நெடுஞ்செழியன்.
திமுக தலைவர் ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் ஆ. ராசா உரை ஆசீவகம் சமூகத்தை உருவாக்கிய வர்களி தமிழர் என கூறுகிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என பாடிய கணியன் பூங்குன்றனார் ஆசிரியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என சொல்கிறார்கள்.
தமிழா? திராவிடமா? என்ற சண்டை நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இந்த நூலில் 345ஆவது பக்கத்தில் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் எழுதி இருக்கிறார்கள், திராவிடத்திற்கு உரியது என்றால் தமிழருக்கு உரியது என சுட்டிக்காட்டியுள்ளார் இது குறித்து இன்னும் விரிவாக அவர் எழுத வேண்டும்" என்றார்.
இதையும் வாசிங்க: ‘திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்’ - பாஜகவிற்கு ஸ்டாலின் பதிலடி!