'இது மதவாத, மக்கள் விரோத கூட்டணி!' பாஜக-அதிமுக கூட்டணியை சாடும் வீரமணி - பி.ஜே.பி.
சென்னை: சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளையும் வளைத்துப்போடும் மதவாத, மக்கள் விரோத கூட்டணி அணி என பாஜக-அதிமுக கூட்டணியை திராவிட கழகத் தலைவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இந்திய நாட்டின் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிப்புத் தரவிருக்கும் நிலையில், நாட்டில் கூட்டணிக்கான பரப்புரைச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன!
கொள்கைக் கூட்டணி ஒருபுறம் - சந்தர்ப்பவாத கூட்டணி மற்றொருபுறம்!
கொள்கை அடிப்படையிலான மதச் சார்பற்ற கொள்கைக் கூட்டணி ஒருபுறம்; எதிர்புறத்தில் ஆட்சி - அதிகாரம் இவைகளைக் காட்டி, மடியில் கனமுள்ளவர்களையும், எல்லாபுறத்திலும் ஏலம் கோரும் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளையும் வளைத்துப்போடும் மதவாத, மக்கள் விரோத கூட்டணி அணி மறுபுறத்தில் நடைபெறுகிறது!
பி.ஜே.பி. கூட்டணி எத்தகையது?
மக்கள் சார்ந்த முற்போக்கு - மதச்சார்பற்ற - மக்கள் நலக் கூட்டணி என்பது அதிகாரபலம், ஆட்சி பலம், பண பலம் இவைகளை எதிர்த்து சாமானிய மக்களின் உரிமைக்குப் போராடும் சமதர்மக் கூட்டணி - கொள்கைக் கூட்டணியாகும்" என தெரிவித்தார்.