தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.9.96 கோடியில் மழைநீர் வடிகால்களில் பழுது பார்க்கும் பணிகள் சென்னையில் தொடக்கம்!

மாநகராட்சிப் பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் மழைநீர் தேக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த வடிகால்களில் தூர்வாரும் பழுது நீக்கும் பணிகள் ரூ.9.96 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன.

வடிகால்களில் தூர்வாரும் பழுது பார்க்கும் பணிகள்
வடிகால்களில் தூர்வாரும் பழுது பார்க்கும் பணிகள்

By

Published : Aug 31, 2021, 10:51 PM IST

சென்னை: மாநகராட்சியில், ரூ.9.96 கோடி செலவில், மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் மற்றும் சிறு பழுதுகள் நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில், 2 ஆயிரத்து 70 கி.மீ. நீளத்திற்கு, 9 ஆயிரத்து 224 மழைநீர் வடிகால்கள் உள்ளன.

இவற்றில் மழைநீர் தங்குதடையின்றி செல்ல இயலாத வகையில் உள்ள, 698 கி.மீ. நீளமுள்ள 4,254 மழைநீர் வடிகால்களில் தூர்வாருதல் மற்றும் சிறு பழுது நீக்குதல் பணிகளுக்காக ரூ.9.96 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அதற்கானப் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை பருவ மழை காலத்திற்கு முன்னதாக முடித்திடவும், மழைநீர் வடிகால்களில் உள்ள சிறு பழுதுகளை உடனடியாக சீரமைத்து, அனைத்து வடிகால்களிலும் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களிடம் ஆணையாளர் அறிவுறுத்தினார்.

இதனையும் படிங்க:'எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது' - ஜெயக்குமார் சவால்

ABOUT THE AUTHOR

...view details