தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தீர்ப்பை ஆகஸ்ட் 4 ம் தேதி தள்ளிவைத்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

By

Published : Aug 2, 2021, 12:28 PM IST

Updated : Aug 4, 2021, 12:07 PM IST

கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், உள்ளிட்டோரை கைது செய்தனர்.

கூலிப்படை

மேலும் என்ஜினீயர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ருவர் ஆனார்.

விசாரணை

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். குற்றம் சாட்டபட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண , ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 2)தீர்ப்பு தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்தார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் வந்தது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட மேரிபுஷ்பம், பொன்னுசாமி ஆகியோர் உடல் நிலை சரியில்லாததால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அவரின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கபட்டது. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிவிக்கபடும் என நீதிபதி அல்லி தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க : முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை - சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது!

Last Updated : Aug 4, 2021, 12:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details