தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக நீதி கண்காணிப்புக் குழுவில் மேலும் ஒருவர்; முதலமைச்சர் உத்தரவு! - chennai latest news

மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்தை சமூக நீதி கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக நியமித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.

சமூக நீதி கண்காணிப்புக் குழுவில் மேலும் ஒருவர்; முதலமைச்சர் உத்தரவு!
சமூக நீதி கண்காணிப்புக் குழுவில் மேலும் ஒருவர்; முதலமைச்சர் உத்தரவு!

By

Published : Oct 25, 2021, 6:20 AM IST

சென்னை: சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதனைக் கண்காணிக்க தமிழ்நாடு அரசால் “சமூகநீதிக் கண்காணிப்புக் குழு’’ அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த குழுவுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மாணவர் சமுதாயத்திற்கான சமூக நீதி, மகளிர் உரிமை மற்றும் பெண்களுக்கு சமூகப் பங்களிப்பில் அதிகாரமளித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்தை குழுவின் உறுப்பினராக நியமித்து, முதலமைச்சர் முகஸ்டாலின் நேற்று (அக்.24) உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:வரி என்ற பெயரில் வழிப்பறி செய்யும் மோடி அரசு - திருநாவுக்கரசர் எம்பி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details