தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 8, 2020, 12:30 PM IST

ETV Bharat / state

ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை எப்போது? - ராமதாஸ் கேள்வி!

சென்னை: திருச்சியில் ஆன்லைன் ரம்மி விளையாடி காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

Dr Ramadoss request government to ban online games
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி ராமதாஸ் வலியுறுத்தல்

திருச்சி மாவட்டத்தில் திருப்பராய்த்துறை அருகே ரம்மி விளையாட்டால் பல பேரிடம் கடன் வாங்கி கடனாளியான காவலர் ஆனந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், "திருச்சியில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ரூபாயை இழந்த ஆனந்த் என்ற காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது.

சூதாட்ட தற்கொலை சோகங்கள் தொடரும் நிலையில், அதற்குக் காரணமாக இருக்கும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவது எப்போது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மியால் கடனாளியான காவலர் தூக்கிட்டு தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details