தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழகத்துக்கு துணைவேந்தர் தேர்வுக்கு தேடுதல் குழு அமைப்பு

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமனம் செய்ய 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நியமித்துள்ளது.

துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிப்பு
துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிப்பு

By

Published : Jan 6, 2023, 6:42 AM IST

சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2018ஆம் டிசம்பர் 31ஆம் தேதி சுதா சேஷையன் நியமிக்கப்பட்டார். அவரின் பதவி காலம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிக்கப்பட்டது.

அந்தப் பட்டியலில் தகுதியான நபர்கள் இல்லை எனக்கூறி சுதா சேஷையனுக்கு மீண்டும் ஒரு ஆண்டு காலம் கால நீடிப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி உடன் துணைவேந்தர் பதவியில் இருந்து சுதா சேஷையன் ஓய்வு பெற்றார்.

அதைத்தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் தேடுதல் குழுவை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் அறிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது.

அந்தப் பதவிக்கு தகுதியான நபரை தேர்வு செய்து அளிப்பதற்கு தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தகுதியான மூன்று நபர்களின் பெயர்களை சுய குறிப்புடன் தயார் செய்து வேந்தருக்கு அனுப்பும்.

துணைவேந்தர் தேடுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் அரசின் நியமன உறுப்பினராக முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் வி கே சுப்புராஜ், செனட் நியமன உறுப்பினர் வசந்தி வித்யாசாகரன், ஆட்சி மன்ற குழு உறுப்பினராக செல்வகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

துணைவேந்தர் பதவிக்கு விருப்பப்படுபவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று தகுதியான மூன்று நபர்களை தேர்வு செய்து அளிப்பார்கள் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: காந்தி சிலைக்கு பதிலாக உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா

ABOUT THE AUTHOR

...view details