தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தை அச்சுறுத்தும் ஜெஎன் 1 வைரஸ்... டாக்டர்.கார்த்திகேயன் கூறுவது என்ன?

JN1 virus: தமிழ்நாட்டில் தற்பொழுது பரவி வரும் ஜெஎன் 1 என்ற வைரஸின் அறிகுறிகள் பற்றியும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவர் கார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவர் கார்த்திகேயன்
மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவர் கார்த்திகேயன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 6:20 PM IST

தமிழகத்தை அச்சுறுத்தும் ஜெஎன் 1 வைரஸ்... டாக்டர்.கார்த்திகேயன் கூறுவது என்ன?

சென்னை:தமிழ்நாட்டில் தற்பொழுது கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஜெஎன் 1 என்ற வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் வீரியம் குறைவாக இருந்தாலும், முன்கூட்டியே சிகிச்சை பெற்றுப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

ஜெஎன் 1 வகை வைரஸ் தொற்று: தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கேரளாவில் அதிகளவில் பரவிய ஜெஎன் 1 வகை வைரஸ், தமிழ்நாட்டில் பரவாமல் இருப்பதற்குத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் துவங்கிய பின்னர் பொதுச் சுகாதாரத்துறை பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.

வீரியம் இல்லை:இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவர் கார்த்திகேயன் கூறியதாவது, “கரோனா வைரஸின் உருமாற்றம் தான் ஜெஎன் 1 ஆகும். ஜெஎன் 1 வைரஸ் அதிகளவில் வீரியம் இல்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO - World Health Organization) இதன் பாதிப்புகள் குறித்து இதுவரை கூறவில்லை.

ஜெஎன் 1 வைரஸ் அறிகுறிகள்: கரோனா வைரஸ் தொற்றின் போது இருந்த அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, உடம்பு வலி போன்றவையே, ஜெஎன் 1 வைரஸ் தொற்றிருக்கும் அறிகுறிகளாக இருக்கும். ஜெஎன் 1 வைரஸ் தொற்றிற்கு, கரோனா தொற்றுக்கு அளித்த அதே சிகிச்சை தான். பரிசோதனையும் அதே போல் தான், தொண்டையில் இருந்து சளி எடுத்துத் தான் பரிசோதனை செய்கிறோம்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்:கரோனா பாதுகாப்பு வழிமுறைகளான முககவசம் அணிதல், பொது வெளியில் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல், கைகளைக் கழுவுதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம். கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை ஜெ.என் 1 வைரஸ் தாக்குமா? என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்தவிதமான தகவலும் அளிக்கவில்லை.

பயப்பட வேண்டாம்:இந்த வைரஸ் பாதிப்பால் கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வந்துள்ளது. எனவே வரும் முன் காப்பதே சிறந்தது. எனவே கராேனாவிற்கு எடுத்துக் கொண்ட முன்னெச்சரிக்கை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இந்த வைரஸின் வீரியம் குறைவு என்பதால் மக்கள் பயப்பட வேண்டாம். தொண்டை வலி இருந்தால் மருத்துவரிடம் கூறி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்களை மீண்டும் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்று பயந்து விடாமல், மருத்துவரை நாடி, முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி - கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details