சென்னை சண்முகம் சாலையில் தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா தொகுதி நிதியிலிருந்து சுமார் ரூ.85 லட்சம் செலவில் நூலகம் அமைத்துள்ளார். இதை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அப்போது டி.ஆர். பாலு பேசியதாவது, "இன்று ஆட்சியில் உள்ளவர்கள் மாறலாம். நாளை பெரிய ஆட்சி அமையலாம். அலுவலர்கள் மாறக் கூடாது. அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்ய வேண்டும். நான் 10 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அரசு விழாவில் கலந்து கொள்கிறேன். முதல் முறையாக இப்போது தான் என்னை அழைத்துள்ளார்கள். இதற்கு முன் எந்த அரசு விழாவிலும், என்னை அழைக்க மாட்டார்கள்.