சென்னை:பாமக இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் - சௌமியா ஆகியோரின் மகள் சங்கமித்ரா. இவருக்கும் சென்னை சோழிங்கநல்லூர் தனசேகரன் - கலைவாணி ஆகியோரின் மகன் ஷங்கர் பாலாஜிக்கும் செப். 1 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. தனது பேத்தியின் திருமணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை ஏற்றி நடத்தி வைத்தார்.
இந்த நிலையில் செப்.13 ஆம் தேதி நடைபெற இருக்கும் தனது மகள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அன்புமணி ராமதாஸ் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.