தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி அறிவிப்பு! - அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: சட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாகவும், 10ஆம் தேதி முதல் நேரடியாகவும் வழங்கப்படும் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி அறிவித்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்!
சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி அறிவித்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்!

By

Published : Aug 1, 2020, 5:48 PM IST

இது குறித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் ஐந்தாண்டு சட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இணையதளம் ( Online ) www.tndalu.ac.in வாயிலாகவும் , ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் நேரடியாகவும் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்ர் 4ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்” என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கா சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிக்கை

மூன்றாண்டு சட்டப்படிப்பு, முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கும் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...கரோனா சிகிச்சை: கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details