சென்னை:சீனா உள்ளிட்ட 10 நாடுகளில் வேகமாகப் பரவும் கரோனா வைரஸ் பிஎப்.7 (Omicron BF.7). இதன் பரவும் வேகம் அதிகமாக இருந்தாலும், பாதிப்புகள் குறைவாகவே இருக்கிறது என மருத்துவர் ஐஸ்வர்யா வினோத் தெரிவித்துள்ளார்.
உருமாறிய கரோனா வைரஸ் பிஎப்.7 குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துடன் பிரத்யேக நேர்காணலில் ரேலா மருத்துவமனையின் (Rela Hospital, Chennai) நுரையீரல் நிபுணர் டாக்டர் ஐஸ்வர்யா வினோத் புதிய கோவிட் மாறுபாடு - Omicron BF.7 வகையின் பரவல், அறிகுறிகள், தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசுகையில், 'கரோனா பாதிப்பு, ஒமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்ததுதான். ஒமைக்ரான் வைரஸிற்கும் இதற்கும் பெரியளவில் மாற்றம் கிடையாது.
காய்ச்சல், சளி போன்றவையும் இதற்கு அறிகுறிகளாக இருக்கிறது. வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணம் உருமாற்றம் அடைந்ததால் தான். தடுப்பூசி எடுத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சீனாவில் மேற்காெள்ளப்பட்ட ஆய்வில், ஏற்கெனவே உள்ள கரோனா வைரஸினை எதிர்கொள்வதற்கான எதிர்ப்பு சக்தி இதனை தடுக்காது.