தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் எழுதும் பொதுத் தேர்வுக்கான சலுகை பட்டியல் வெளியீடு! - physically challenged student's board exam concession list

சென்னை: 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் பட்டியலை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம்
DPI

By

Published : Dec 15, 2019, 5:00 PM IST

அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைப் பட்டியிலில் கூறப்பட்டுள்ளதாவது,

'கண் பார்வையற்ற, காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக எழுதுபவரை நியமித்துக் கொள்ளலாம். காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், மனவளர்ச்சி குன்றியோருக்கு இரு மொழிப் பாடங்களில் ஏதேனும் ஒரு மொழிப்பாடம் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படும்.

டிஸ்லெக்சியா குறைபாடு, நரம்பியல் கோளாறு உள்ளவர்களுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி, கிளார்க் அட்டவணை பயன்படுத்த அனுமதி, கேள்வித்தாளை படித்துக்காட்ட அல்லது சொல்வதை எழுத ஆசிரியரை நியமிக்க அனுமதி (இரண்டில் ஏதேனும் ஒரு சலுகை அவரின் கோரிக்கைபடி), ஏதேனும் ஒரு மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து தவிர்ப்பு வழங்குதல், மொழி அல்லாத பிற பாடங்களை திருத்தும்போது எழுத்து பிழைக்கென மதிப்பெண் குறைக்காமல் பாடப் பொருளை மட்டும் கணக்கில் கொண்டு மதிப்பெண் அளித்தல், பள்ளியில் முறையாக பயின்றோ அல்லது பள்ளியில் முறையாக பயிலாமல் தனிப்பட்ட முறையில் ஆசிரியரிடம் சிறப்பு பயிற்சி பெற்றோ தனித் தேர்வராக பொதுத் தேர்வு எழுத அனுமதித்தல் ஆகியவை வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு சலுகை பெறும் மாணவர்கள் அனைவருக்கும் கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்படும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கேட்கலாம் என அதில்' கூறப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையை பெறுவதற்கு முறையான ஆவணங்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அரசுத் தேர்வுத்துறைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை - தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details