தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானைகளை இனி வெடி வைத்து விரட்டக்கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் - யானைகளை இனி வெடி வைத்து விரட்டக்கூடாது

சென்னை: யானைகளை காட்டுக்குள் விரட்ட வெடிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

madras High court verdict on chasing elephants
madras High court verdict on chasing elephants

By

Published : Jan 21, 2021, 9:46 PM IST

கோவை வனப்பகுதியில் நாட்டு வெடி வைக்கப்பட்டிருந்த பழத்தை சாப்பிட்டபோது, காயமடைந்த மக்னா யானை, அப்பகுதியில் சுற்றித் திரிந்து வந்தது. யானையின் நாக்கு துண்டானதால் உணவு பொருள்களை சாப்பிட முடியமால் சிரமப்பட்டது.

இந்த யானைக்கு உரிய சிகிச்சை வழங்கும்படி தமிழ்நாடு வனத்துறைக்கு உத்தரவிடக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், ஏற்கனவே காயமடைந்த யானையை மேலும் காயப்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து விரட்ட முயற்சித்த செயல் ஏற்றுகொள்ளத்தக்கதல்ல எனவும், பட்டாசு வெடித்து அதை விரட்டிய வனத்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே சிகிச்சை பலனின்றி யானை இறந்துவிட்ட நிலையில், வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையும் யானைகளை விரட்ட என்ன வழிகாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது தொடர்பாகவும், மக்னா யானை இறந்தது தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய, வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (ஜன. 21) நீதிபதிகள் சத்தியநாராயணன், நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வனத்துறை சார்பில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும், யானை உயிரிழந்தது தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து யானைகளை காட்டுக்குள் விரட்ட வெடிகள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டுமென வனத்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சையளிக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க... காது கிழிந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details