சென்னை:முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்குச் சென்றபோது அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில், மாவட்ட கிளைச் செயலாளரைத் தாக்கியதாக பால்வளத் துறை முன்னாள்அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி உள்ளிட்ட ஐவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்பிணைக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கைத் திரும்பப்பெற்றதால், இவர்களின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர்கள் முன்பிணை கோரி மனு தாக்கல்செய்திருந்தனர்.