சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 10) சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திமுகவினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இன்று மறைந்த ஜெ. அன்பழகனுக்கு 62ஆவது பிறந்தநாள். பிறந்தநாளன்றே அவர் உயிர் பிரிந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில், 3 நாள்கள் கரோனா கண்காணிப்பு குழு ஆய்வு