கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்வதற்காக ஐடிசி நிறுவனமும் டோமினோஸ் நிறுவனமும் கைகோர்த்துள்ளன.
அத்தியாவசிய பொருள்கள் டெலிவரி செய்யும் டோமினோஸ்! - அத்தியாவசிய பொருள்கள் டெலிவரி செய்யும் டோமினோஸ்!
சென்னை: ஐடிசி நிறுவனத்துடன் இணைந்து அத்தியாவசிய பொருள்கள் விநியோகிக்கும் பணிகளை டோமினோஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
அதன்படி, பீட்சா விற்பனை நிறுவனமான டோமினோஸின் செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் ஐடிசி நிறுவனத்தின் ஆசிர்வாத் கோதுமை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருள்கள் காம்போவாக ஆர்டர் செய்ய முடியும். இந்த வசதி சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட பெரு நகரங்களில் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் டோமினோஸ் செயலியில் எஸ்சென்சியல் என்ற தேர்வை பயன்படுத்தி பொருள்களை வாங்கலாம். இந்த டெலிவரியானது விநியோகம் செய்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே தொடர்பில்லாத வகையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோமினோஸ் நிறுவனம் தனக்கென பிரத்யேக விநியோக வலைப்பின்னலை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.