தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - சென்னையில் சிலிண்டர் விலை

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1118.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

By

Published : Mar 1, 2023, 6:25 AM IST

Updated : Mar 1, 2023, 6:37 AM IST

சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்து, ரூ.1118.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (பிப்.28) ரூ.1,068-க்கு விற்பனையானது. அதேபோல வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து ரூ.2,268-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மறுப்புறம் சென்னையில் 284ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனையாகிறது. நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கும், வணிக பயன்பாட்டுக்கும் என 2 வகையான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அதன்படி சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கும் 19 கிலோ எடையிலும் விற்பனையாகிறது. இந்த சிலிண்டர்களின் விலையில் ஏற்ற, இறக்கம் இருக்கும். பெட்ரோலியம் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயிக்கின்றன. இந்த விலை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப மாறுபடும்.

இதையும் படிங்க:கழுத்தை நெரிக்கிறதா வீட்டுக்கடன்? தப்பிக்க என்ன வழி?

Last Updated : Mar 1, 2023, 6:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details