சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாகர் கனக பள்ளி. இவர் தனது வீட்டில் லில்லி என்ற நாய்க்குட்டியை செல்லமாக வளர்த்துவந்துள்ளார். இச்சூழலில், இவர் கடந்த ஜூலை 24ஆம் தேதி சவுந்தர்ராஜன் தெருவில் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.
சக நாயுடன் கொஞ்சி விளையாடும் லில்லி அப்போது, தன்னுடன் லில்லியையும் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அப்போது நாய்க்குட்டி காணமால் போயுள்ளது. எங்கு தேடியும் கிடைக்காததால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாய்க்குட்டி காணாமல் போன இடம் புகார் அளித்ததோடு நின்றுவிடாமல், நாய்க்குட்டி தொலைந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் தானே ஆய்வு செய்து, அது எந்தெந்த சாலைகளில் சென்றது எனவும் கண்டுபிடித்துள்ளார். இருப்பினும், அதனைக் கண்டுபிடிக்க முடியாததால், லில்லியின் புகைப்படத்தை வெளியிட்டு, அதைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தற்போது விளம்பரம் செய்துள்ளார்.
நாய்க்குட்டி உரிமையாளர் வெளியிட்ட விளம்பரம் தி.நகரில் வெங்கடநாராயணா சாலையும், தாமோதரன் சாலையும் சந்திக்கும் இடத்தில் கடைசியாக அந்த நாய்க்குட்டியைப் பார்த்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வரும் நாய் : வியக்கும் மக்கள்