அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் பல்வேறு விவாதங்களில் கலந்துகொண்டு காரசார கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட இறுதி விவாதத்தின்போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "சீனாவைப் பாருங்கள் அது இழிவானது, ரஷ்யா மற்றும் இந்தியாவைப் பாருங்கள் அது அசுத்தமானது நாம் நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள நம்ப முடியாத பல்வேறு பணிகளைச் செய்துள்ளோம்" எனக் கூறினார்.
ட்ரம்ப்பின் இந்த கருத்திற்கு இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.