இந்திய மருத்துவக் குழுவின் ஆணைப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையை 4டி-2 என்ற எண் அரசாணையின் மூலம் குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப்படுத்த வேண்டும், பட்ட மேற்படிப்பு மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டுவந்தன.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்! - மருத்துவர்கள்
சென்னை: ஆறு வாரங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எழுத்துப் பூர்வமாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்ததால் மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தையில் மருத்துவ பிரதிநிதிகள் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவ பிரதிநிதிகள் தலைமைச் செயலகம் சென்றனர். அங்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மருத்துவர்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்ததை அடுத்து மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.