சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தும் மருத்துவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் துறை கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையருக்கு இணையம் மூலம் சமூக ஆர்வலர் தேவராஜன் புகார் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள், மாணவர்கள் ஊதிய உயர்வு, அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.