சென்னையில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தவர், மருத்துவர் ரம்யா. பின்னர், அங்கிருந்து விலகி, தனியாக மருத்துவமனை தொடங்கியுள்ளார். இந்நிலையில், தனியாக மருத்துவமனை தொடங்கியதற்காக, மருத்துவர் தாமஸ் என்பவர் கூலிப்படையை ஏவி, தன்னை கொல்ல முயற்சித்ததாக அவர் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மருத்துவர் தாமஸ் மீது செம்பியம் காவல் துறையினர் 2017ஆம் ஆண்டு இரு வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்நிலையில், முதல் வழக்கு தொடர்பாக மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தனக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தும், இரண்டாவது வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.