சென்னை: இது குறித்து அவர் கூறியதாவது, “அமைச்சர் செந்தில் பாலாஜி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். கடலூர் மாவட்டம் வாண்டையார் இருப்பு ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்பான பிரச்னையில் நான் தலையிடவில்லை எனக் கூறினார். அவரது பெயரை இதில் தொடர்பு படுத்தியமைக்காக வருத்தத்தை தெரிவித்தார்.
அமைச்சர் மீது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்திற்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னையும் இல்லை. மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. அமைச்சரிடம் நானும் எனது வருத்தத்தை தெரிவித்தேன். மருத்துவர்களிடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக அரசு, நேர்மையான முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சிறையில் உள்ள மருத்துவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவரை கைது செய்ய காரணமாக இருந்த நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மருத்துவர்களிடையே ஏற்பட்ட பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் கரோனா தொற்று பணிச்சுமை என தெரிகிறது. தொடர்ந்து விடுப்பின்றி இடைவிடாது கரோனா பணியில் மருத்துவர்களை ஈடுபடுத்துவதால் ஏற்படும் கடும் மன அழுத்தம் காரணமாக உருவாகும் முரண்பாடுகள் பல்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது. அவர்களிடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைத்து வருகிறது. கரோனா தொற்று பணி வழங்குவதில் சாதியப் பாகுபாடு், பாரபட்சம் நிலவுகிறது.