தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல் மருத்துவ மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தல்! - Doctors Association for Social Equality

சென்னை: பல் மருத்துவப் பயிற்சி மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அவருடன் தங்கியுள்ள அனைத்து பல் பயிற்சி மருத்தவர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க அறிக்கை  பல் மருத்துவ பயிற்சி மருத்துவருக்கு கரோனா  dental practice doctor get confirmed covid-19  chennai news  சென்னை செய்திகள்
பல் மருத்துவ மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தல்

By

Published : May 11, 2020, 1:25 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை பல் மருத்துவப் பயிற்சி மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அவருடன் பணி புரிந்த, விடுதியில் தங்கியுள்ள அனைத்து பல் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை பல் மருத்துவ மாணவர்கள், ஊழியர்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்திட வேண்டும்.

அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும். பல் மருத்துவமனையைத் தற்காலிகமாக மூடி, முழுமையாகக் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களின் விடுதியிலும் கிருமி நீக்கம், தூய்மைப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இதற்குத் தேவையான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். பல் மருத்துவர்கள், பிற மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், ஊழியர்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ராயபுரத்தில் ஒரே நாளில் 81 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details