தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரிகள்: அரசு பணி வழங்க கோரிக்கை - அரசு பணி வழங்க கோரிக்கை

சென்னை: பொறியியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் தங்களுக்கு நேரடியாக அரசு பணி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

government
government

By

Published : Dec 16, 2020, 2:36 PM IST

தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை தொழில்நுட்ப கல்வி ஆணையரை சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தச் சங்கத்தின் நிர்வாகி உதயவாணி கூறும்பொழுது, "பொறியியல் முனைவர் பட்டம் முடித்துள்ளோம்.அரசு பணி வேண்டுமென்பதற்காக என்பதற்காக மனு அளிக்க வந்துள்ளோம்.

அரசு கல்வி நிறுவனங்களில் 1,500 காலி பணியிடங்கள் உள்ளன. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் விதிமுறைகளின்படி முனைவர் பட்டம் முடித்தவர்கள் நேரடியாக பணி நியமனம் செய்யலாம் என விதியில் உள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் எம்.இ போன்ற முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்கின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசு முனைவர் பட்டம் பெற்றவர்களை நேரடியாக நியமனம் செய்ய முடியும்.

அரசு பணி வழங்க கோரிக்கை

பொறியியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ள நாங்கள் வெளிமாநிலங்களில் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு பணி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். கரோனா காலத்தில் பணி இல்லாமல் அவதிப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற தங்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details