தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் வழக்கில் அரசு மருத்துவர் ஜாமின் மனு தள்ளுபடி - பாலியல் வழக்கில் மருத்துவரின் ஜாமின் மனு ரத்து

கரோனா சிகிச்சையின் போது பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட அரசு மருத்துவரின் பிணை மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

sexual harassment பாலியல் வழக்கு பாலியல் வன்புணர்வு பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பாலியல் துண்புருத்தக்  sexual harassment case in chennai high court  doctor involved in sexual harassment at chennai  chennai latest news  Sexual harassment issues in tamilnadu  bail dismissed in sexual harassment case  doctor involved in sexual harassment  doctor bail cancelled by chennai high court  பாலியல் வன்புணர்வு கொடுத்த மருத்துவர்  தமிழ்நாட்டிலுள்ள பாலியல் வழக்குகள்  பெண் மருத்துவருக்கு பாலியல் துன்புறுத்தல்  பாலியல் வழக்கில் மருத்துவரின் ஜாமின் மனு ரத்து  கரோனா சிகிச்சையில் போது பெண் மருத்துவருக்கு பாலியல்
சென்னை உயர் நீதி மன்றம்

By

Published : Dec 1, 2021, 2:13 PM IST

சென்னை:கரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை தனிமைபடுத்துவதற்காக, சிலர் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியிலும், சிலர் அரசு செலவிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் 35 வயதான அரசு மருத்துவர் வெற்றிசெல்வன், தன்னை தனிமைபடுத்திக்கொள்வதற்காக, ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அப்போது அதே விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண் மருத்துவரின் அறைக்குள் புகுந்த மருத்துவர் வெற்றிசெல்வன், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த பெண் மருத்துவரும், விடுதி நிர்வாகமும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை காவல் நிலையத்தினர் வெற்றிச்செல்வனை அக்டோபர் 18ஆம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், பிணை கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெற்றிசெல்வன் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு நேற்று (நவ. 30) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதாக கூறி அரசு மருத்துவர் வெற்றிச்செல்வனின் பிணை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய போட்டோகிராபர் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details