தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல இதய மருத்துவர் கே.வி.திருவேங்கடம் கரோனாவால் காலமானார்! - மருத்துவர் திருவேங்கடம் கரோனா

சென்னை: இதய மருத்துவரும், ஆஸ்துமா நிபுணருமான பேராசிரியர் கே.வி.திருவேங்கடம் கரோனா தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.

doctor thiruvengadam
பிரபல இதய மருத்துவர் கே.வி. திருவேங்கடம் கரோனாவால் காலமானார்

By

Published : Oct 3, 2020, 4:47 PM IST

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய கே.வி.டி என்று அழைக்கப்படும் பேராசிரியர் கே.வி. திருவேங்கடம், சென்னை நகரின் பிரபலமான இதயநோய் வல்லுநராகவும், ஆஸ்துமா சிகிச்சை நிபுணராகவும் அறியப்படுபவர்.

அண்மையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், இன்று காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவியும் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

நோயாளிகளுடன் மிகவும் கனிவாக பழகும் இயல்பு கொண்டவர் இவர், 'இதயம், சிறுநீரகம் என உறுப்புகளுக்கு நீங்கள் சிகிச்சை அளிப்பதாகப் பார்க்காமல் ஒரு மனிதருக்கு சிகிச்சையளிப்பதாக பாருங்கள்' என தனது மாணவர்களிடம் கூறுவார் என அவருடன் பணியாற்றியவர்கள் நினைவு கூறுகின்றனர்.

இவர் மருத்துவர்களுக்கான பிசி.ராய் விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்டவைகளை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சித்த மருத்துவத்தால் கரோனாவை வெல்ல முடியும் - தமிழ்நாடு அரசுக்கு சவால்

ABOUT THE AUTHOR

...view details