தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மருத்துவருக்குக் கரோனா தொற்று!

சென்னை: மாம்பலம் பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது

கரோனா
கரோனா

By

Published : Apr 6, 2020, 2:00 PM IST

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. தமிழ்நாட்டில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையிலுள்ள மாம்பலம் பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக, வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக அவரிடம் சிகிச்சைப் பெற்றுச் சென்றவர்களின் கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை, காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான மருத்துவருக்கு எவ்வாறு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது, அண்மையில் வெளிமாநிலம் சென்று வந்தாரா என்பன போன்ற அடிப்படை தகவல்களைத் திரட்டும் பணியைச் சுகாதாரத்துறை, காவல்துறை அலுவலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:சென்னையில் 8 இடங்கள் மூடப்பட்டு சீல்!

ABOUT THE AUTHOR

...view details