இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஐக்கிய நாடுகள் சபையால் 2014ஆம் ஆண்டு முதல் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் இந்தாண்டு ஆறாவது சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வீட்டிலேயே யோகா செய்யுங்கள்: ஆளுநர் வேண்டுகோள்! - Yoga Day
சென்னை: சர்வதேச யோகா தினமான இன்று வீட்டிலேயே குடும்பத்துடன் யோகா செய்யுங்கள் என தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா தொற்று நோயால் வீட்டிலேயே குடும்பத்துடன் யோகா செய்யுங்கள் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஆண்டிற்கான யோகாவின் கருப்பொருளாக வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா அமைக்கப்பட்டுள்ளது.
யோகா பண்டைய இந்திய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற பரிசு. இது மனம் மற்றும் உடலின் ஒற்றுமையை உள்ளடக்குகிறது. சிந்தனை மற்றும் செயல் கட்டுப்பாடு, ஆரோக்கியம், நல்வாழ்வு போன்றவற்றை அளிக்கிறது. யோகாசனம் செய்வதால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட கோளாறுகளை தவிர்க்கலாம்.
மேலும், மன அழுத்தம் போன்றவற்றையும் குறைக்க உதவுகிறது. பொதுமக்கள் ஒன்றாகக்கூடி யோகா தின கொண்டாட்டங்களை நடத்த வேண்டும். ஆனால், தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாடு மக்கள் இத்தினத்தை தங்கள் வீடுகளில் கொண்டாட வேண்டும். கோவிட்-19 தொடர்பான அரசின் வழிகாட்டுதல்களை கடுமையாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:மோடி கூறியது அப்படி இல்லை: விளக்கமளித்த பிரதமர் அலுவலகம்!