அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான 280 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. குற்றச்சாட்டு தொடர்பாக தொடர்ந்து சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
’துணை வேந்தர் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்கக் கூடாது’
சென்னை: அண்ணாப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவை நேரில் அழைத்து கலையரசன் குழு விசாரணை செய்யக்கூடாது என அண்ணாப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், சாட்சியங்கள் விசாரணை இந்த மாதத்தில் முடிக்கப்படும் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி இரண்டாது வாரத்தில் துணைவேந்தர் சூரப்பாவை நேரில் விசாரணைக்கு அழைக்க கலையரசன் குழு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அருள்அறம், செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ளக்கூடாது.
அவர் பதவியில் நீடித்து வரும் பல்கலைக்கழக துணைவேந்தரை நேரடியாக விசாரணைக்கு அழைத்தால் பல்கலைக்கழகத்திற்கு அது இழப்பையும் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதாக அமையும். எனவே நேரில் அழைத்து விசாரணை நடத்தக்கூடாது" என அதில் கூறியுள்ளனர்.