சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த சத்யபிரத சாகு, 'மாநிலத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளுக்கு மறுதேர்தல் நடைபெறவுள்ளது. இந்தப் பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள அரசியல் கட்சியினருக்கு அனுமதி கிடையாது.
'மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பரப்புரை செய்யக் கூடாது' - places where the reconciliation
சென்னை: மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 இடங்களிலும் பரப்புரை மேற்கொள்ள அனுமதியில்லை என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்கு இயந்திரம், விவிபேட் உள்ளனவா என்பதை ஆய்வு செய்துவருகிறோம். மறுவாக்குப்பதிவு நடைபெறும் இயந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள்முன்னிலையில் பரிசோதித்த பின்னரே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும்.
மொத்தம் 46 இடங்களுக்கு மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் 13 இடங்களுக்கு மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 248ஆவது வாக்குச்சாவடி, ஆண்டிபட்டியில் உள்ள 67ஆவது வாக்குச்சாவடி, பெரியகுளத்தில் உள்ள 197ஆவது வாக்குச்சாவடி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் உள்ள 8 வாக்குச்சாவடிகள், கடலூர் மாவட்டத்தில் 210ஆவது வாக்குச்சாவடி, திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி ஆகியவை அடங்கும்' என கூறினார்.