சீனாவில் உருவான கரோனா வைரஸ் பல நாடுகளை ஆட்கொண்டுவருகிறது. வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசு வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமல்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.