தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 1, 2023, 8:06 PM IST

ETV Bharat / state

"இப்படி பேசினாதான் இவனுங்க அடங்குவானுங்க" திமுக அமைச்சர்கள் குறித்து அண்ணாமலை காட்டம்

தமிழக மண்ணில் திமுக அழிவது நிச்சயம் என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Annamalai
அண்ணாமலை

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

தூத்துக்குடி:தூத்துக்குடியில் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "தமிழக முதலமைச்சர் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று வந்தது வரவேற்கக்கூடியது. கடந்த முறை தமிழக முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்ற போது மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை இதுவரை வெளியிடவில்லை. அதேபோல பாரதிய ஜனதா கட்சி பல குற்றச்சாட்டை வைத்துள்ளது. உதயநிதி பவுண்டேஷன், நோபல் பவுண்டேஷன் இரண்டும் ஒரே முகவரியில் உள்ளதால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்டப்படும் என கூறி இருப்பது தெரிந்தும் தமிழக முதலமைச்சர் கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேகதாது அணை கட்டப்படும் என பெயரளவில் மட்டும் அவர்கள் குறிப்பிடவில்லை. நேற்று நடைபெற்ற அலுவல் கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளிடமும் மேகதாது அணை கட்ட தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதற்கு எதிராக தமிழக அரசு எந்தவித குரலையும் எழுப்பாமல் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது,

மேகதாது அணை கட்டக்கூடிய சூழ்நிலை வந்தால் தமிழக பாஜக அதனை நிச்சயம் தடுத்து நிறுத்தும். அமைச்சர் பொன்முடி வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் எல்லாம் பொன்னான வார்த்தைகள். அந்த காலத்தில் ஆசிரியர்கள் பிரம்பை வைத்து மாணவர்களை அடித்தார்கள். மாணவர்கள் தற்போது ஆசிரியர்களை அடிக்கின்றனர். உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்க பொன்முடிக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை. தமிழக அரசு எப்போது திருந்த போகிறது என தெரியவில்லை.

எல்லோரையும் அரவணைத்து செல்லக்கூடிய மனிதன் நான். எஸ்.வி சேகர் மட்டுமல்ல, கூட இருக்க கூடிய அனைவருக்கும் சொல்கிறேன். பழம்பெரும் கதையை சொல்லி கன்ட்ரோல் பண்ண வேண்டாம். என் மீது பழி சுமத்தும் பாஜகவினர் நேராக டெல்லிக்கு சென்று புகார் அளிக்கலாம். தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் பகுதிகள் வளர்ச்சி பெற வேண்டும். இங்கு உற்பத்தி தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக சிறப்பு முதலீட்டாளர் மாநாட்டை இந்த பகுதியில் நடத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாட்டில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

காப்பர் ஏற்றுமதி செய்து வந்த இந்தியா தற்போது இறக்குமதியை செய்து வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள அமைச்சர்களுக்கு இந்த பகுதி மீது அக்கறை வேண்டும். அவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு இங்கே புதிய நிறுவனங்களை தொடங்க வேண்டும். கல்லூரிகளை அமைக்க வேண்டும். தொடர்ந்து, தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் தான் இந்த பகுதி வளர்ச்சி பெறும்.

தமிழகத்தில் நடைபெறும் ஊழலை எதிர்த்து வரும் ஜூலை 9ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை துவங்க இருக்கிறேன். அப்போது திமுக அரசின் இரண்டாவது ஊழல் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இங்கு மணல் கடத்தலை தடுக்க முயலும் விஏஓ உள்ளிட்ட வருவாய் துறையினர் வெட்டி கொலை செய்யப்படுகின்றனர். வருமான வரி சோதனைக்கு செல்லும் அதிகாரிகள் தாக்கப்படுகின்றனர். அந்த அளவுக்கு தமிழகத்தில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது என்பது யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஜனநாயகத்தில் யாரையும் தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது. அதிமுகவை ஒன்றிணைப்பது பாஜகவின் வேலை இல்லை. அது அக்கட்சியின் தொண்டர்களுடைய வேலை. தமிழகத்தில் உள்ள பல பெண்கள் தாலி இழப்பதற்கு காரணமாகி வரும் மது மூலமாக ஊழல் செய்து வரும் அமைச்சர்களை கர்மா ஒருபோதும் விட்டு வைக்காது. தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் மட்டும் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

திமுகவினர் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார்கள். பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது எவ்வளவு செயல்படுத்தப்பட்டுள்ளது? என்று அதிகாரிகள் கேள்வி கேட்காமல் மது விற்பனை எவ்வளவு நடைபெற்று உள்ளது என்று கூட்டத்தில் கேள்வி எழுப்புகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி 1,400 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளார். திமுக தமிழக மண்ணில் அழிவது சத்தியம், நிச்சயம்" என்றார்.

முன்னதாக தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயத்துக்கு சென்ற அண்ணாமலை, வழிபாடு நடத்தினார்.

இதையும் படிங்க: Seeman Twitter Account: சீமான் ட்விட்டர் முடக்கம்.. முதலமைச்சர் கண்டனமும் காவல் துறையின் விளக்கமும்!

ABOUT THE AUTHOR

...view details