தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தலை அடுத்து, "விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல்" எனும் தேர்தல் பரப்புரை பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இரண்டாவது நாளாக நேற்று (நவம்பர் 21) நாகையில் பரப்புரை மேற்கொண்ட அவர், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீன 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, 27 ஆவது குருமகாசந்நிதானம் உதயநிதி ஸ்டாலினுக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். தொடர்ந்து தமிழ் கடவுள் சேயோன் (முருகன் பாமாலை) என்ற மயிலாடுதுறை ஆன்மீக பேரவை தொகுத்தளித்த நூலினை தருமபுர ஆதீனம் வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின் - dmk udhayanidhi stalin
நாகை: தேர்தல் பரப்புரையின்போது, தருமபுரம் ஆதீன 27ஆவது குருமகாசந்நிதானத்தைச் சந்தித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆசிப்பெற்றார்.
இதைத்தொடர்ந்து, 1972 - ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீன கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டின்போது தருமபுரம் ஆதீன மடத்தில் கலைஞர் மு.கருணாநிதி தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானத்தை சந்தித்து ஆசி பெற்ற புகைப்படத்தை, உதயநிதி ஸ்டாலின் குருமகாசந்நிதானத்திற்கு நினைவு பரிசாக வழங்கினார். தொடர்ந்து 26 - ஆவது குருமகாசந்நிதானம் முக்தியடைந்து ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து வெளியிடப்பட உள்ள குருபூஜை மலருக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து செய்தியை தெரிவித்தார்.
இதையும் படிங்க:அடேங்கப்பா! அடுத்த 6 ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து இவ்வளவு மாறுமா?
TAGGED:
நாகை தருமபுரம் ஆதீனம்