தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு தேர்தல் - திமுக உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு!

சென்னை மாநகராட்சியில் வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில், திமுக மாமன்ற உறுப்பினர்கள் 9 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

By

Published : Jul 27, 2023, 5:09 PM IST

DMK won
வரிவிதிப்பு

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் மான்றக் கூட்டரங்கில் இன்று(ஜூலை27) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, தேர்தல் நடத்தும் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் முன்னிலையில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.

இதில், வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழுவில் உள்ள 9 இடங்களுக்கு, திமுகவின் மாமன்ற உறுப்பினர்கள் சந்திரன், தேவி கதிரேசன், ராஜேஷ் ஜெயின், உஷா, கமல், புஷ்பலதா, ஸ்ரீதரன், செல்வக்குமார், முருகேசன் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். பிற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, 9 மாமன்ற உறுப்பினர்களின் வேட்புமனுக்கள் பரசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த 9 பேருக்கும் போட்டியாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதனால், ஒன்பது பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வில், மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு என்றால் என்ன?

சென்னை மாநகராட்சியில், பொதுமக்கள் வரி அதிகமாக இருப்பதை உணர்ந்தால், இந்த குழுவிடம் மனு கொடுக்கலாம். அந்த மனுவின் படி, இக்குழு குறிப்பிட்ட வரிகள் தொடர்பாக ஆய்வு செய்யும். பின்னர் அந்த வரிகளில் திருத்தம் செய்ய தேவையிருந்தால், அதனை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பரிந்துரை செய்து தீர்வு காண வழி செய்யும்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிருப்தி: வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு தேர்தலில், முதலில் திமுக சார்பில் எட்டு பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் போட்டியிட முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்திற்கு இருவர் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கோஷ்டி மோதல் வந்ததால், அந்த ஒரு இடமும் திமுகவினருக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க: தஞ்சையில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாமில் முதலமைச்சர் திடீர் ஆய்வு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details