தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீமானுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - துரைமுருகன் - seeman latest

சென்னை: சீமான் போன்றவர்களின்  கருத்துக்கு நான் பதில் கூறி என் தரத்தைத்  தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Durai Murugan

By

Published : Oct 16, 2019, 6:40 PM IST

திமுக பொருளாளர் துரைமுருகன், சென்னையில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "நான் கருத்துக் கணிப்புகளைப் பார்ப்பது இல்லை. என்னுடைய கணிப்புப்படி திமுக கூட்டணி இரண்டு தொகுதியிலும் வெற்றிபெறும்.

சுகாதாரத் துறை என்ற துறை ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஏதோ ஒரு மாவட்டத்தில் இப்படிப்பட்ட நோய் வரும் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். வேலூரில் 10 பேரை சந்தித்ததில் ஆறு பேருக்கு காய்ச்சல் உள்ளது. எனவே சுகாதாரத் துறை இப்படி சுகாதாரம் கேட்டு நான் பார்த்தது இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டு அரசியல் எவ்வளவு தரம்தாழ்ந்து போயிருக்கிறது என்பதற்குச் சீமானின் பேச்சு எடுத்துக்காட்டு என்றார். பொதுவாக ஒரு தலைவர் மறைந்தால் அதைப் பற்றிப் பேசுவது கிடையாது என்று சொன்ன அவர், சீமான் போன்றவர்களின் கருத்துக்குப் பதில் கூறி எங்களைத் தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே:புதுச்சேரி அரசு ஆளுநரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறது: ரங்கசாமி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details