2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், சிறந்த தமிழ் அறிஞருக்கான விருது பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு வழங்கப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ என்ற விருதும், 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் அவருக்கு வழங்கப்பட்டது.
10 ஆண்டுகளுக்குப் பின் உயிர் பெற்றுள்ள ‘செம்மொழித் தமிழ் விருது’! - tamil award
சென்னை: 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த செம்மொழித் தமிழ் விருது தற்போது மீண்டும் வழங்கப்பட இருக்கிறது.
மேலும், வருடா வருடம் சிறந்த தமிழ் அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அந்த விருது யாருக்கும் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அந்த விருது மீண்டும் வழங்கப்பட வேண்டும் என விசிக பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்ததையடுத்து, அந்த விருது மீண்டும் வழங்கப்படும் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவித்துள்ளது.