சென்னை:திமுக கவுன்சிலர் நிரஞ்சனா ஜெகதீசன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. ”சென்னை மாநகராட்சியின் 51வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனா ஜெகதீசன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, தி.மு.க.விற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், செயல்பட்டு வந்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இவருடைய கணவன் ஜெகதீசன் என்பவர் ஏற்கனவே திமுக உறுப்பினராகவும், உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இவர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களைத் தாக்க முயன்ற வீடியோ வெளியாகி, இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.