திராவிட இயக்கத்தின் பிதாமகன், சமதர்ம சமத்துவ அரசியல் தமிழ்நாட்டில் கோலோச்சுவதற்கு அடித்தளமிட்டவர் என்றெல்லாம் தமிழர்களால் கொண்டாடப்படும் தந்தை பெரியாரின் 46ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தந்தை பெரியார் 46ஆவது நினைவு நாள்: ஸ்டாலின் மரியாதை! - பெரியார்
சென்னை: தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
mk stalin
இதனையடுத்து, சென்னை சிம்சனில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: பெரியார் ஏன் இன்றும் தேவைப்படுகிறார்?