இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, காஞ்சிபுரம் மாவட்டம், மணமைநல்லூரில் செயல்பட்டு வந்த ‘பொன்னையா இராமஜெயம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், கல்லூரி மூடப்பட்டதன் காரணமாக, கல்வி தொடர இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட 108 மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் "பாதிக்கப்பட்ட 108 மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் பத்து நாட்களுக்குள் சேர்த்துக் கொள்ள இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
திமுக நடவடிக்கை எதிரொலி: 108 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட்! - அரசு மருத்துவக் கல்லூரி
சென்னை: திமுக கொடுத்த மனுவின் அடிப்படையில் தனியார் கல்லூரியால் பாதிக்கப்பட்ட108 மருத்துவ மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக அரசு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு இன்று வரை பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்காததால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பாதிக்கப்பட்ட மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், பொன்னையா இராமஜெயம் மருத்துவக் கல்லூரியில் பயின்ற 108 மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவர்களுக்கு உடனடியாக இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சுகாதாரச் துறை செயலாளர் மற்றும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணை வேந்தர் ஆகியோருக்கு கடந்த ஜனவரி 22ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அதனடிப்படையில் ‘பொன்னையா இராமஜெயம் மருத்துவக் கல்லூரி’யில் கல்வி பயில சேர்ந்த 108 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.