இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2009ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் அரசின் முடிவிற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கரோனா நேரத்தில் மருத்துவர்கள் 'முன் கள வீரர்களில்' முக்கியமானவர்கள்.
அதேபோலதான் ஓய்வு பெற்ற மருத்துவர்களும், அவர்கள் தமிழ்நாடு மக்களுக்காகத் தன்னலமற்று பணியாற்றியவர்கள். அவர்களுக்கான ஓய்வூதிய உயர்வை தற்போதுள்ள நிதி நிலைமையில் சமாளிக்க முடியாது என்றால், டெண்டர்களுக்கு 1000 கோடி, 10 ஆயிரம் கோடி ரூபாய் என அனுமதி அளிப்பதற்கு எங்கிருந்து அரசிற்கு நிதி வருகிறது.