தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு - ஸ்டாலின் கண்டனம்! - சென்னை மாவட்டச் செய்திகள்

சென்னை: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ், கொண்டு வந்திருப்பதை திரும்பப் பெறாவிட்டால், திமுக சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

dmk stalin
dmk stalin

By

Published : Apr 29, 2020, 12:16 PM IST

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டிய காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ், மத்திய பாஜக அரசு கொண்டு வந்து ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தைச் சிதைப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொம்மை அமைப்பாக அமைக்கப்பட்ட இந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் முழு நேரத் தலைவரை நியமிக்காமல், மத்திய நீர்ப்பாசன வளர்ச்சித்துறையின் செயலாளரையே பொறுப்புத் தலைவராக நியமித்து, இன்றுவரை மத்திய பாஜக அரசு இந்த அமைப்பையே முற்றிலும் முடக்கி விட்டது.

தமிழ்நாடு காவிரி நதி நீர் உரிமையை ஒவ்வொரு கட்டமாக விட்டுக் கொடுத்து - நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஆகியவற்றின் பயன்களைத் தமிழ்நாடு விவசாயிகள் அனுபவிக்க விடாமல் செய்த குற்றத்தையே அதிமுக அரசு செய்திருக்கிறது.

இது போதாது என்று, இப்போது காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தையே மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ், கொண்டு வந்துள்ளது. அது தன்னாட்சி அமைப்பு அல்ல. ஆனால், அதனை மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட கைகட்டி நிற்கும் அமைப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. இந்த அடாவடியான செயல், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயல்.

காவிரி நதி நீர் உரிமை பறிபோவதை இனிமேலும் தமிழ்நாடு பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த அரசிதழ் திரும்பப் பெறப்படவில்லை என்றால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாயப் பேரமைப்புகளையும் ஒன்று சேர்த்து மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" என எச்சரித்துள்ளார்.

அதேபோல், "காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ், கொண்டு வந்திருப்பது தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல். தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக தமிழ்நாடு அமைச்சரவையைக் கூட்டி, இந்த முடிவினை கைவிட வேண்டும். இந்த அரசிதழ் உடனடியாக திரும்பப் பெறப்படவில்லை என்றால் மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" எனவும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க:உலகில் 31 லட்சம் பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details