இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு தனது 95ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடிவருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பொதுவுடைமைத் தத்துவம் எப்படி இருக்கும்? எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக இதோ நம்முன் வாழும் அய்யா நல்லகண்ணுவைப் போல இருக்கும்! 95லும் தொய்வில்லாப் போராளி- நல்லகண்ணு அய்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
#Nallakannu95 " என பதிவிட்டுள்ளார்.