தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 28ஆம் தேதி கூடுகிறது. இந்நிலையில் எந்தெந்தப் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் குரல் எழுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் திமுகவின் VoiceofTN@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி அக்கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
உங்கள் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க ஓர் வாய்ப்பு! - தமிழ்நாடு சட்டப்பேரவை
சென்னை: சட்டப்பேரவை வருகின்ற ஜூன் 28 ஆம் தேதி கூடும் நிலையில் பொதுமக்கள் உடனடிக் கவனம் பெற வேண்டும் என நினைக்கும் பிரச்னைகளை VoiceofTN@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி திமுக கேட்டுக் கொண்டுள்ளது.
dmk-stalin
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'குடிநீர் பஞ்சம் தொடங்கி வேலையில்லாத் திண்டாட்டம் வரை தமிழ்நாட்டில் நிலவும் ஒவ்வொரு பேரவலமும் வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதை திமுக உறுதி செய்யும். உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்னை என நீங்கள் கருதுவதை VoiceofTN@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்' எனக் கேட்டுக் கொண்டுள்ளது.